சென்னை, ஜன. 9 உள்நாட்டு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற உற்பத்தியாளரான நியூமெரஸ் மோட்டார்ஸ், மின்சாரத்தில் இயங்கும் இரண்டு பைக்குகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. சுற்றுச் சூழல் உகந்த போக்குவரத்தை மறுவரையறை செய்யும் வகை யில் டிப்லோஸ் மேக்ஸ், டிப்லோஸ் ப்ரோ மற்றும் டிப்லோஸ் I-ப்ரோ ஆகிய ஸ்கூட்டர்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன. இதில் டிப்லோஸ் மேக்ஸ், ஜனவரி 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்டு முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. இந்த வாகனங்களில் சேஸ், பேட்டரி, மோட்டார், கன்ட்ரோலர் போன்ற வாகன அமைப்புகள் நிலையான நீண்ட கால உகந்த செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டு, ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனத்தின் நிறுவனர் ஷ்ரேயாஸ் ஷிபுலால் கூறினார்.