திருவள்ளூர்,பிப்.1- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் திருவள்ளூர் மாவட்ட 2025 ஆம் ஆண்டு உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.இதற்கு மாவட்ட தலைவர் வி.பி.கோவிந்தராஜுலு,தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் பெ.ரூபன் வரவேற்றார். டியுஜெ உறுப்பினர் முகாமை மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் துவக்கி வைத்து பேசினார். இதில் மாநில பொதுச் செயலாளர் கே.முத்து, மாநில இணைச் செயலாளர் ஆர்.முருககனி, மாவட்ட பொருளாளர் என்.முனுசாமி, கௌரவ தலைவர் புலவர் .க.தேவராஜ், மாவட்ட செயலாளர் எம்.யுவராஜ்,மாவட்ட துணைத் தலைவர் கோ.ரமேஷ் ஆகியோர் பேசினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் கே.வெங்கடேஷ்வர்லு நன்றி கூறினார். முன்னதாக மறைந்த ஈநாடு பத்திரிகையாளர் நரசம்மா குடும்ப நிதியாக டியுஜெ சார்பில் ரூ.10 ஆயிரத்தை மாநில தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் நரசம்மா மகன் சிலம்பரசனிடம் வழங்கினார். மேலும் மறைந்த மூத்த பத்திரிகையாளர் முகமது கவுஸின் 2 பெண் குழந்தைகள் பெயரில் கல்வி செலவிற்காக தபால் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி டெபாசிட் செய்ததற்கான ஆவணத்தை முகமது கவுஸ் மனைவியிடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மறைந்த நரசம்மா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.