districts

img

சென்னையில் டீசல் தட்டுப்பாடு

சென்னை, செப்.6- சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ள னர்.  சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்கு களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பங்க்குகளில் ‘டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள்  அதிர்ச்சிக் குள்ளாகி உள்ளனர். அந்தவகையில், சென்னையில் கடந்த 3 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர்  ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 2வது நாளாக டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பெட்ரோல் பங்க்குகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு  உள்ளது.