districts

img

ஏரியில் பதுக்கிய  சாராய ஊறல் அழிப்பு

விழுப்புரம், செப். 12- விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பனந்தல் ஏரியில் சாராய ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர் அப்போது ஏரியில் சுமார் 900 லிட்டர் சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை மீட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக ரெட்டி யார்பாளையம் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுந்தரத்தை தேடி வருகின்றனர்.