சென்னை, அக்.3 உடல்நல பராமரிப்புத் துறையில் சிறந்த தொழில் முனைவோரை அங்கீகரிக் கும் வகையில் லெக்ஸா சார்பில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “ஹெல்த்பிரீ னர் விருதுகள்” வழங்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் பல் துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விருது பெற்ற வர்களை கவுரவித்தனர். சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஜூமேரா லைஃப்ஸ்டைல் நிர்வாக இயக்குநர் டாக்டர் முகமது இப்ரா`ஹிம் அல் ஹாஜ், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், புதுச்சேரி சுங்க இலாகா தலைமை ஆணை யர். எம்.வி.எஸ் சவுத்ரி, மலே சிய தூதரக வர்த்தக ஆணை யர் வான் அஹ்மத் தர்மிசி வான் இட்ரிஸ், மனித உரிமைகள் ஆணைய செய லாளர் விஜயகார்த்தி கேயன், இந்தியாவுக்கான செஷஷெல்ஸ் கவுரவத் தூதர் சேஷா சாய், இந்திய -ஐக்கிய அரபு எமிரேட் சங்கத்தலைவர் ஸ்ரீதேவி அருணாச்சலம் உள்ளிட் டோர் இதில் கலந்துகொண்ட னர்.