districts

img

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னை வடக்கு கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 27) சேத்துப்பட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் டி.சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாவட்டச்செயலாளர் எஸ்.மனோன்மணி, நிர்வாகிகள் மனோகர், சதாசிவம், சேகர், சிவகுமார், ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.