districts

img

குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரிக்கை

மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்,  8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஆக.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளன தலைவர் ரமேஷ் சுந்தர், சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்திய நாராயணன், துணைத்தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் பேசினர்.