districts

இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல் குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஆக.31- உளுந்தூர்பேட்டையில் வாட்சப் நெட்வொர்க் குரூப் அமைத்து இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய அனைத்து குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலைதளங்களில் இருக்கும் பெண்கள் குறித்த புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நீக்க வேண்டும், இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய உளுந்தூர்பேட்டை முக்கிய பிரமுகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வி.சந்திரா, எம். தீபன்ராஜ், ஏ.கஸ்தூரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாநிலச் செயலாளர் டி.சங்கரி, மாவட்டத் தலைவர் இ.அலமேலு, செயலாளர் ஏ.தேவி,  வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னராசு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.