districts

img

சிபிஎம் பிரச்சாரத்தைத் தடுக்க பாஜகவின் தில்லி காவல்துறை முயற்சி

புதுதில்லி, மே 19- பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று வாக்காளர்களு க்கு அழைப்பு விடுத்த சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி தலைமையிலான பிரச் சாரத்தை தடுத்து நிறுத்த ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கோல் மார்க்கெட், மந்திர் மார்க், கோல்டகானா, காளிபாரி பகுதிக ளில் சிபிஎம் பிரச்சாரக் குழுவை காவல்துறையினர் நான்கு முறை  தடுத்து நிறுத்தினர். காவல்துறை யின் அழுத்தத்தையும் மீறி மூன்று மணி நேரம் பிரச்சாரம் தொடர்ந்தது. மத்தியக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திர சர்மா, அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தில்லி யில் இந்தியா கூட்டணி வேட்பாளர்க ளுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேக ரித்தனர். ஒவ்வொரு முறையும் அவர்க ளைத் தடுத்த காவல்துறையினர், பிரச்சாரம் சட்டவிரோதமானது என்று அவர்களிடம் கூறினர். எந்தச் சட்டத்தை மீறியது என்று கேட்ட தற்கு, கட்சிக் கொடியைப் பயன் படுத்தக் கூடாது என தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரச்சாரம் செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூறியதையடுத்து, காவல்துறையி னர் திரும்பிச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அதிக மான ராணுவத்தினர் வந்து அவர் களை மீண்டும் தடுக்க முயன்றனர். சந்தைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. பாஜகவின் கொள்கைகள் மீது மக்களிடம் உள்ள கோபத்தை மக்களிடம் இருந்து அறிந்துகொள்ள முடிந்ததாக எம்.ஏ.பேபி தெரிவித்தார். தில்லி யில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இதில் இந்திய கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்க ளிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.