districts

img

தினசரி குடிநீர் வழங்க சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

சென்னை, பிப். 22- 41ஆவது வட்டத்தில் தினசரி குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆர்.கே. நகர் 41ஆவது வட்ட பகுதியில் கடந்த 15 நாட்க ளாக குடிநீர் முறையாக வராததால் மக்கள் பெரும் அவதிப்  பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சிறிது நேரம் வரக்   கூடிய தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து வருவ தால் நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதைய டுத்து மாமன்ற உறுப்பினர் பா.விமலா பொதுமக்களுடன் சென்று பொறியாளர் நமச்சிவாயத்தை சந்தித்து தினசரி குடிநீர் வழங்குவதையும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். இதில் துணைப் பொறியாளர் சுரேஷ்குமார், சிபிஎம் பகுதி செயலாளர் வெ.ரவிக்குமார், வேலு, ராஜா, விக்கி, யுவராணி, புவனேஸ்வரி, செண்பகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தங்கம் விலை உயர்வு சென்னை,பிப்.22- சென்னையில் சனிக்கிழமையன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,360க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை யாகிறது.