சிதம்பரம், ஜூலை 4-
சிதம்பரம் கோவில் சம்பவத்தைச் சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி ஆட்சி யரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் புகார் கொடுத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பர நகரச் செயலாளர் ராஜா தலை மையில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், நகர் குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, நகரத் தலைவர் அமுதா, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோர் சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர், காவல் துறையினர் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனைக் கொச்சை படுத்தும் விதமாகவும், கோயிலில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை சுட்டி காட்டுபவர்கள் மீது சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகை யில் தவறான பிரச்சாரத்தைச் சமூக வலை தளத்தில் செய்து வருகின்றனர். இது தேவையற்ற பதட்டத்தையும் ஒற்றுமையின் மையையும் உருவாக்கும். எனவே, தவறான பிரச்சாரம் மேற்கொள்ளும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.