விழுப்புரம், ஜூலை 8- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆத ரித்து உதயசூரியன் சின்னத்திற்கு சிபிஎம் வாக்கு கேட்டு தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டியில் சிபிஎம் சார்பில் அன்னியூர் சிவாவை ஆதரித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது , கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிபிஎம் கட்சியின் மாநில கட்டுப்பாடு குழு உறுப்பினர் ஈ.சங்கர், கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர் அன்னியூர் சிவா விற்கு வாக்கு சேகரித் தனர். கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சித்ரா,விக்கிர வாண்டி இடைக்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஆர்.கிருஷ்ணராஜ்,எஸ்.அமுதா ஏ.சேகர் எஸ்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.