districts

img

குழாய் பதிப்புக்கு எதிராக தொடரும் போராட்டம்

கிருஷ்ணகிரி, டிச 23- விளைநிலத்தில் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவன திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் ஓசூரில் போராட்டம் நடத்தினர். கோவை இருகூரிலிருந்து கர்நாடகாவில் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறு வனத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை ஐடிபிஎல் 2019 இல் அறிவித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பென்னை ஆற்று நீர் பாசன பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர்  நிலத்தில் 55 கிலோ மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணியை துவங்க, ஐடிபிஎல் அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு கடிதம் கொடுக்கப்பட்டது.  அப்போதே, அனைத்து விவசாயிகளுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்து குழாய் பதிக்க அனுமதிக்க முடியாது என ஐடிபிஎல் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது. பிறகு, ஐடிபிஎல் நிறுவனம் குழாய் பதிக்கும் முயற்சியை துவங்கிய 9.9.2019ல் விவசாயிகள் சங்க மாநிலத் துணை தலைவர் பி. டில்லி பாபு தலைமையில் மறியல் போரா ட்டம் நடத்தியதுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.  கொரோனா பெருந்தொ ற்றின்போதும் இந்த பிரச்சனை முன்னுக்கு வந்தது. அன்றைக்கு (7.7.2020)  கிராமங்கள் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு கொடுத்ததை தொடர்ந்து இரண்டாவது முறையாக பணிகள் நிறுத்தப்பட்டது. பிறகு, சூளகிரி வட்டத்தில் 15.9.2020இல் விவசாயிகள் நிலத்தில் இறங்கி கருப்புக் கொடி யுடன் போராட்டம் நடத்தினர்.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மூன்றாவது முறையாக பணிகள் நிறுத்தப்பட்டது.  இவ்வளவுக்குப் பிறகும், ஓசூரில்  கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதாக ஐடிபிஎல் அதிகாரிகள் விவசாயிகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பினர். “வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதால்,  விவசாயிகள் மீண்டும் போராடி அந்தக் கூட்டத்தையும் தடுத்து நிறுத்தினர்.  பிறகு, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், ஐடிபிஎல் அதிகாரி ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் அனுமதியின்றி விவசாய நிலத்தில் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து நான்காவது முறையாக கடிதமும் கொடுத்தனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, இந்த பிரச்ச னைகள் குறித்து  முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் புகார் கடிதம் அனுப்பினர். அதனை பரிசீ லித்த முதலமைச்சசர், விவசாய நிலம் வழியே குழாய் பதிக்க  தமிழக அரசு அனுமதிக்காது என அறிவிப்பு வெளியிட்டார். 2021 செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி  “மக்களை தேடி மருத்துவ” திட்டம் துவக்கி வைப்பற்கு ஓசூருக்கு முதல்வர் வருகை தந்தார். அப்போதும், இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் நிலம் பாதிக்கும் படியான ஐடிபிஎல் திட்டத்தை அனுமதிக்க முடியாது,

அப்படி எங்காவது செயல்படுத்தப்பட்டால் அதில் சம்பந்தப்பட்ட அரசு அதி காரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து சென்றார். அதையும் மீறி 21.12.2021 ல் ஐடிபிஎல் குழாய் பதிப்பு திட்டம் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று மீண்டும் விவசாயிக ளுக்கு மிரட்டல் கடிதம் வழங்கியது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஓசூர் வட்டத் தலைவர் திம்மா ரெட்டி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐடிபிஎல் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சாந்த குமார், நஞ்சுண்டன், சீனிவாச ரெட்டி, ஆனந்த ரெட்டி, சந்திரன், முருகேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொரு ளாளர் முனியப்பா, எம்.எம்.ராஜூ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் சி.பி. ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெய ராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐடிபிஎல் அதி காரிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. மாற்றுப் பாதை யில் நெடுஞ்சாலை ஓரமாக பாரத் பெட்ரோலியம் குழாய் பதிப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் சங்கமும், ஒருங்கி ணைப்புக் குழுவும் கோரிக்கை விடுத்ததை ஏற்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தி கடிதம் எழுதுவதாக இத்திட்டத்தின் தருமபுரி மண்டல உதவி ஆணையர் (ஆயம்) பொறுப்பு மற்றும் அதிகாரம் பெற்ற அலுவலர் ஒப்புதல் கடிதம் கொடுத்தார். மேலும் இனி விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலம் வழியே குழாய் பதிப்பு திட்டம் செயல்படுத்தபடாது எனவும் உறுதி அளித்தார்.

;