districts

img

கட்டுமான தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்ட பேரவை

சென்னை, ஜூன் 3 - கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட 4ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜூன் 2) நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி. ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையை சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத்தார். கட்டுமான சங்க வடசென்னை மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். சம்மேளன துணைத் தலைவர் கே.தங்க மோகன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டத் தலைவராக ம.உதயகுமார், செயலாளராக சி.மார்டின், பொருளாளராக, பி.ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;