districts

img

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம்

காஞ்சிபுரம், டிச.19- சிஐடியு தலைவர்கள் பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தனை பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலை யில் பணிபுரியும் பெண் தொழி லாளர்களுக்கு விடுதியில் தரமற்ற  உணவு வழங்கப்பட்டது. அதை   உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் 6 பேர் நிலை என்ன ஆனது என்று தெரியாதால்  விடுதி முன்பும் போராட்டம் நடத்தி னர். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசு கேட்டுக் கொண்டதால் பெண் தொழிலாளர் களை சந்தித்து பேசச் சென்ற  சிஐடியு  தலைவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், திருபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், படப்பை செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, வாலிபர் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், கே.நேரு ஆகியோர் பேசினர்.

திருப்பெரும்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் பெ.வடிவேலன் தலைமை வகித்தார். இதில்  தினகரன், கௌரிசங்கர், வாலிபர்  சங்க மாவட்ட தலைவர் டி.எல்.கார்த்திக் ஆகியோர் பேசினர். படப்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் எஸ்.திருஞானம்  தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ் உள்ளிட்டோர் பலர் பேசினர். குன்றத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார்  தலைமை வகித்தார். இதில் வட்டச் செயலாளர் எம்.எஸ்.ராஜா, வட்டக்குழு உறுப்பினர் ஆர்.சுகுமார் ஆகியோர் பேசினர். உத்திரமேரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் வினாயகமூர்த்தி  தலைமை வகித்தார். இதில் இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், கே.நேரு ஆகியோர் பேசினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்த கத்தில் சிஐடியு  சார்பில்  மாவட்ட துணைச்  செயலாளர் மாசிலாமணி  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கொத்தடிமைகள் போல நடத்தப்படும் தொழிலாளர்கள்

இந்நிலையில்  பாக்ஸ்கான் ஆலையின்  17 விடுதிகளில் 16 ஆயிரம்  தொழிலாளர்களை நிர்வாகம்  கொத்தடிமை போல் நடத்தி வரு கிறது.  தொழிற்சாலையிலும் சரி அதன்  விடுதியிலும் சரி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கொத்தடிமை போல் பெண்கள் நடத்தப்படுகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனும் உடனடியாக தலை யிட்டு தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும். கைது செய்துள்ள தொழிற்சங்கத் தலைவர்களையும், தொழிலாளர்களையும் விடுதலை செய்திட வேண்டும். பெண் தொழி லாளர்களைத் தாக்கிய காவல்து றையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறையில் அடைப்பு

இதற்கிடையே ஓரகடத்தில் கைதுசெய்யப்பட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், வாலிபர் சங்க செயலாளர் பகத்சிங் தாஸ் உள்ளிட்டோர் ஞாயிறன்று விடியற் காலையில் திருபெரும்புதூர் நீதிபதி முன்பு ஆஜார்படுத்தப்பட்டனர்.  பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

;