districts

img

தோழர் ஜி.லோகிதாசன் காலமானார்

திருவள்ளூர், டிச.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வி.பி.சி கிளை  உறுப்பினர் தோழர் ஜி.லோகிதாசன் ஞாயிறன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த தோழர் ஜி.லோகிதாசன்  சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் பகுதி பொருளாளராக இருந்து பணியாற்றியவர். அவரது  உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஜோசப், குப்பன், கோபாலகிருஷ்ணன், லோகநாதன், கிரிதர் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் லோகிதாசனுக்கு லதா என்ற மனைவியும்,  ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.  கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று மாலை  அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.