districts

img

தோழர் சி.பி.ராமச்சந்திரன் காலமானார்

சென்னை, மார்ச் 13- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடி தோழர் சி.பி. ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் செவ் வாயன்று (மார்ச் 12) காலமா னார். அவருக்கு வயது 71. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தாம்பரம் பகுதிக் குழு உறுப்பினர், சானி டோரியம் கிளைச் செய லாளர் என பணியாற்றிய தோழர் சி.பி. ராமச்சந்திரன், சானடோரியம் பகுதி குடி யிருப்போர் நல சங்கத்தின்  தலைவராகவும் பணியாற்றி னார். அறிவியல் இயக்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர், பள்ளி களில் அறிவியல் நிகழ்வு களை நடத்தி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். சிறந்த புகைப் படக் கலைஞராகவும் இருந்தார். அன்னாரது உடல் எண்.11, பெரியாழ்வார் தெரு, கிழக்கு தாம்பரம்,  சென்னை-59 (சானடோரி யம் ரயில் நிலையம்) அருகில் உள்ள இல்லத்தில்  அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அவரது இறுதி நிகழ்ச்சி வியாழனன்று (மார்ச் 14) காலை 11 மணி அளவில் நடைபெறும். தபால் தந்தி ஊழியர் சங்கத் தலைவர் மறைந்த சி.எஸ். பஞ்சாபகேசனின் மகன்  சி.பி. ராமச்சந்திரன் என்பதும், சி.பி. ரவிசங்கர், சி.பி.கிருஷ்ணன் ஆகி யோர் இவரது சகோதரர் கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.