districts

img

மா.வேலாயுதம் படத்திறப்பு நினைவேந்தல்

கள்ளக்குறிச்சி, மே14 - உளுந்தூர்பேட்டை வட்டம், எடைக்கல் கிராமம் தமுஎகச மாவட்டப் பொருளாளர் கந்தசாமி, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் தந்தையுமான மா.வேலாயுதம் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர் சீனிவாசன் தலைமையில் எடைக்கல் கிராமத்தில் நடைபெற்றது. மறைந்த வேலாயுதம் உருவப்படத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  டி.ஏழுமலை, மாவட்டகுழு உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், எம்.செந்தில், வி.சாமிநாதன் (சிஐடியு), கு.சுதா(தமுஎகச), வை. கருணாகரன் (இடைநிலைஆசிரியர் கூட்டமைப்பு), எம் .கே.பழனி (வாலிபர்சங்கம்), ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ஜே.ஜெயக்குமார், பி.ஸ்டாலின்(சிபிஎம்), சு. வெங்கடேசன் (மின்ஊழியர்மத்தியஅமைப்பு), ஆசிரியர்கள் இ. ஜெயப்பிரகாஷ், சி.திருசங்கு, க.குமரன், த.ரமேஷ், ந.சந்திரசேகரன் மற்றும் குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.

;