districts

img

புதுவையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 26-

    புதுச்சேரி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி சேதராப்பட்டில் இயங்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். மரணமடைந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய   உறுப்பினர் சேர்க்கை உடனுக்கு உடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டு மான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால உதவி தொகை ரூ. 5 ஆயிரம்  வழங்க வேண்டும்.    

   ஆண்டுக்கணக்கில் அல்லல்படும் புதுச்சேரி யு கால், சோலி பிசியோ, இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் தொழி லாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.  புதுச்சேரி இளைஞர்க ளுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்கி தர வேண்டும். என்பன கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டம் நடை பெற்றது.

    அண்ணா சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி மாநிலத்  தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சீனி வாசன் நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், கலியன்,ரவிச்சந்திரன், ராஜ்குமார், வடி வேல், மணவாளன், விஜயகுமார் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.