சென்னை பிரஸ் கிளப் தேர்தல் டிச. 15ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, நவ. 29- 52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 15 ஆம் தேதி தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் மற்றும் ஐந்து கமிட்டி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனுக்களை சனிக்கிழமை (நவ.30) முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை 9-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 10-ந்தேதி வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 10-ந்தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். 15-ந்தேதி வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அதன்பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பாரதிதாசன் தெரிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பிறகே இந்த ஆண்டு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு
சென்னை, நவ. 29– தீபாவளியின் போது உச்சம் தொட்டி ருந்த தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.1,760 வரை குறைந்தது. இந்த நிலையில் வெள்ளியன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் அரசுக்கு இழப்பு
சென்னை, நவ.29- நீதிமன்றங்களில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடு களால் கல்வித்துறை சார்ந்த வழக்கு களில் அரசுக்கு சுமார் ரூ. 1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரி வித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கில், தமிழக பொதுத்துறை செய லாளர் நேரில் ஆஜரானார். தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது நட வடிக்கைகள் எடுக்கப்படுவதை போல் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஜிஎஸ்டி எண் வைத்திருப்போரிடம் தொழில்வரி வசூலிக்கப்படும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, நவ.29- சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில், தொழில் வரி வசூலிக்கும் பணியை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி எண் வைத்திருப்போரின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் நிதி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி பிரதானமாக உள்ளது. அதன்படி, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ரூ.1,800 கோடி வரை வரி வசூலிக்கப்படுகிறது. அதேபோல், மாநக ராட்சியில் பதிவு செய்த சிறிய கடைகள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறு வனங்களிடம் இருந்து, ரூ.550 கோடி தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சியில் தொழில் வரியை அதிகரிக்க, இந்த வரியை செலுத்தாமல் இருப்போர் குறித்த கணக்கெடுக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி எண் வைத்திருப்போர் அனைவரும், தொழில் வரி செலுத்துவது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. இதனால், ஜிஎஸ்டி எண் வைத்துள்ளோரை அடையாளம் கண்டு, அவர்களிடம் தொழில் வரி வசூலிக்கும் பணியை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. மாநகராட்சியின் வருவாயை பெருக்க, தங்களிடம் உள்ள விவரங்கள் அடிப்படையில், விடுபட்டோரை தேடி பிடித்து, தொழில் வரி செலுத்த அவர்களின் செல்போன்களில் அறிவுறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வராயன் மலை உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்கள் பாத்திரம் கழுவிய விவகாரம் தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்
கள்ளக்குறிச்சி, நவ.29 - கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் மலைவாழ் மக்களின் குழந்தை களுக்காக வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள், விவசாயக் கூலிகளின் குழந்தைகளாகும். பெற்றோர் கோரிக்கை இந்த பள்ளியில், தினமும் காலை உணவு அருந்திய மாணவர்கள், உணவு சமைத்த பாத்திரங்களை கழுவி வைக்கும் நிலை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 28 ஆம் தேதி தொடக்கப் பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகளே கழுவிடும் வீடியோ வெளி யாகிய நிலையில் பெற்றோர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண வர்களை பாத்திரங்கள் கழுவும் பணியில் ஈடுபடுத்திய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். பணியிடை நீக்கம் இந்த நிலையில், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இன்நாடு உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர் சபஸ்டின், அப்பள்ளியின் சமையலர் ராதிகா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆய்வுக்கு பிறகும்…. இதுகுறித்து கல்வராயன் மலை பகுதி மக்கள் கூறுகையில், விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த கல்வ ராயன் மலைப் பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளை துவக்கியது. ஆனால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்றனர். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்வராயன் மலையில் சேராப்பட்டு அருகே உள்ள கிலாக்காடு அரசு தொடக்கப் பள்ளி, சேராப்பட்டு உண்டு உறைவிட மேல் நிலைப்பள்ளி, என் நாடு உண்டு உறைவிட பள்ளிகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்குப் பிறகும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லை. எனவே உண்டு உறைவிடப் பள்ளிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓடும் பேருந்தில் 52 சவரன் நகை கொள்ளை
கடலூர், நவ.29- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ராஜவேல் வீதியில் நகைக்கடையில் இருப்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜான் பால் பணிபுரிந்து வரு கிறார். இவர் கடையில் இருந்து 52 சவரன் புதிய நகை களை ஹால்மார்க் சீல் போடுவதற்காக, பெண்ணா டத்தில் உள்ள ஒரு நகை பட்டறைக்கு கொண்டு சென்றார். பின்னர் அவர், ஹால்மார்க் சீல் போட்டு நகைகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு திருச்சியில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி விருத்தாசலத்துக்கு புறப்பட்டார். அந்த பேருந்து விருத்தா சலம் அடுத்த கருவேப்பி லங்குறிச்சி நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விட நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ஜான்பாலின் அருகே அமர்ந்தபடி பய ணம் செய்த மர்ம நபர் ஒரு வர், திடீரென அவரிடம் இருந்த நகை பையை பறித்துக் கொண்டார். பின்னர் அந்த நபர், மின்னல் வேகத்தில் இறங்கி, அங்கு ஏற்கெனவே மோட்டார் சைக்கிளுடன் தயாராக காத்திருந்த மற்றொரு நபருடன் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். பறிபோன நகை களின் மதிப்பு ரூ.28 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாலை விரிவாக்கப் பணி பொன்னேரி அருகே 28 வீடுகள் இடிப்பு
பொன்னேரி,நவ.29- பொன்னேரியை அடுத்த புதுவாயல்-பழவேற்காடு இணைப்பு சாலை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.45 கோடி மதிப்பில் 4. 2 கிலோமீட்டர் தூரம் இந்த பணி நடக்கிறது. சாலை விரி வாக்கப்பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்து வதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் சாலை விரிவாக்கம் மெதுவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்கத்தால் 52 வீடுகள் பாதிக்கப்படுவதாக நிலம் கைய கப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய காவனம், சின்ன காவனம் பகுதி பொது மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி னர். இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறை யினர் சாலை விரிவாக்கப்பணிக்கு எடுக்கப் படும் வீடுகளுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் மற்றும் இழப்பீடு வழங்கி இருந்தனர். இதைத் தொடர்ந்து சின்னக்காவனம் பகுதியில் உள்ள 28 வீடுகள் பொன்னேரி உதவி கோட்ட பொறி யாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியா ளர் பரந்தாமன் முன்னிலையில் அகற்றப்பட் டது. மீதமுள்ள 24 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு விரைந்து வீடுகளை இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள்: காவலர் உள்பட 2 பேர் கைது
சென்னை, நவ. 29- சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவலர் ஜேம்ஸ், அவரது நண்பர் சுரேந்தர் நாத் மெத்தா பெட்டமைன் போதைப் பொருள் விற் பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட காவ லரும், நண்பரும் வடபழனி காவல் நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர். இரு வரிடமும் 10 கிராம் மெத்த பட்டமையின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
திருவல்லிக்கேணியில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
சென்னை,நவ.29- சென்னை, திருவல்லிக் கேணி காமகலா காமேஸ் வரர் கோவிலுக்குச் சொந்த மான ரூ.7.5 கோடி மதிப்பி லான காலிமனை மீட்கப் பட்டு கோவில் வசம் ஒப்படை க்கப்பட்டது. சென்னை, திருவல்லிக் கேணி, ராஜா அனுமந்த தெரு வில் 5305 சதுரடி பரப்பளவு கொண்ட காலிமனையா னது. காமகலா காமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமா னது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மண்டலம் இணை ஆணையரின் அறி வுரைகளின் படி, உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகி யோரின் உதவியுடன் காலி மனை மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட் டது.
கிழக்கு கடற்கரை 6 வழிச்சாலை விரிவாக்கத்திற்கு மாநகராட்சி நிலம்
சென்னை,நவ.29- சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் வியாழ னன்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: சென்னை நடுநிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் கற்றல் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.8ஆயிரத்திலி ருந்து ரூ.11,970ஆக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று, உதவியாளர்களுக் கான மாத மதிப்பூதியம் ரூ.5000லிருந்து ரூ.8850ஆக உயர்த்தப்பட்டது. அம்மா உணவகங்களுக்கு தேவை யான பொருட்களை டியூசிஎஸ் மூலம் கொள்முதல் செய்ய அனுமதி உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநகராட்சி பகுதி களில் உள்ள 8340 தெருக்களில், தெருக்களின் பெயர் பலகைகள் அமை ப்பது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நிலம் கையகப்படுத்த ஒப்புதல் கிழக்கு கடற்கரை 6 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ் சாலை துறைக்கு நிலம் மாறுதல் செய்ய பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பி க்கப்பட்டுள்ளது. நிலம் மாறுதல் செய்வது குறித்து ஆட்சேபனை எது வும் இல்லை எனவும், தடையில்லா சான்று வழங்க பரிந்துரைக்கப்பட்டுள் ளது. அதன்படி பாலவாக்கம், கொட்டி வாக்கம், நீலாங்கரை, மற்றும் ஈஞ்சம் பாக்கம் கிராமங்களில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை நெடுஞ்சாலை துறைக்கு மாறுதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு புறம்போக்கு, மேய்க்கால், குட்டை, கிராம நத்தம் வகைப்பாடு கொண்ட நிலத்தை கிழக்கு கடற்கரை 6 வழி சாலை விரிவாக்கம் பணிக்காக நிலம் மாறுதல் செய்யப்படவுள்ளது.