ஊராட்சி மன்றங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம்,டிச.2- விழுப்புரம் மாவட்டத்தில் நூறு நாள் வேலையில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகா தாரத்துறை அலுவலர்கள் மூலம் பல்வேறு கொரோளா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்தும் விதமாக 13 ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தொடர்ந்து தடைபெற்று வருகிறது. கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 42 ஊராட்சி மன்றத் தலை வர்கள், செயலாளர்கள், கண்டமாங்கலம் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட 45 ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஆட்சியர், “கொ ரோனாதடுப்பூசி செலுத்தும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். முதல் தவணை செலுத்தாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த பணியில் ஊராட்சி மன்ற தலை வர்கள், செயலர்கள் ஒவ்வொரு வீடுகளும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தும் வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டு நூறு விழுக்காடு இலக்கை எட்டும் ஊராட்சிக்கு தங்க நாணயம் பரிசு வழங்குவதாக அமைச்சர் மஸ்தான் அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டிய ஆட்சியர், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் தங்க நாணயத்தை இலக்காக கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டப்பணிகளை நேரடியாக உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தான் கொண்டு சேர்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமாகும். இத்திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், கவனமுடன் பணியாற்றி சிறப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வே ண்டும். இத்திட்டத்தில் தவறான பயனாளி கள் சேர்க்கப்பட்டு இருப்பது கண்ட றியப்பட்டால், தொடர்புடைய ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை செய்தார்.
சாலை பழுதால் நிறுத்தப்பட்ட நகர பேருந்து: மாணவர்கள்அவதி
கிருஷ்ணகிரி, நவ 30- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், கம்மநாயக்கன் பேட்டை, போக்கிபுரம், வேம்பள்ளி, கிருஷ்ணபள்ளி, இன்டிகானூர் ஆகிய பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூளகிரி அரசு பள்ளிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களாக அரசு பேருந்து வராததால் மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் எட்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்வதென்றால் கூட கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் தற்போது பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.
புதுவையில் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
புதுச்சேரி,டிச.3- புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 6 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு ஒரு வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டதுடன். குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே சென்றது. இதுகுறித்து பல்வேறு ஆய்வுகளும் அரசுக்கு சுட்டிக்காட்டின. இதனையடுத்து, பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் நடத்த தயாராகி வந்தனர். அரசும், வழிக்காட்டி நெறிமுறைகளை வெளியிட்டது. பிறகு, பள்ளிகளை திறப்பதற்கும் கல்வித்துறையும் அரசும் அறிவிப்பை வெளியிட்டது, அதன்படி, கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொற்றோரும் மாணவர்களும் தயாராகிய நிலையில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் மீண்டும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றார். ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது கல்வித்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.