மதுபாட்டிகளை விற்ற 2 பேர் கைது
திருவள்ளூர், மே 21- பழவேற்காடு பகுதியில் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்து கள்ள தனமாக மது பாட்டில்களை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டார பகுதி களில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக திருப் பாலைவனம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த பகுதியில் கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பழவேற்காடு மேம்பாலம் அருகே 2 பேர் மது பாட்டிகள் விற்பனை செய்து கொண்டிருந்தனர், அவர்களை காவல் துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில், அவர்கள் லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட சேர்ந்த ஐயப்பன்(31), சரத்குமார் (31) என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து படகு மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்ட தும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஓய்வுபெற்ற மருத்துவர்கள் செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்த மக்கள் தேசம் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மே 21- கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் செவிலியர்களை தற்காலிகமாக பணிய மர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தேசம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் நிறுவனர் சாத்தை ஏ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனா 2ஆவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ மனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படு வோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலி யர்கள் பாதிக்கப்பட்டால் கூட அவர்களுக்கு சிகிச்சை யளிக்கக்கூட படுக்கைகள் இல்லை என்பது வேதனை யானது. கொரோனா தொற்று அதிகரித்து மக்களுக்கு சிகிச்சை யளிக்க இடமில்லாவிட்டால் விடுதிகள், கோயில்கள், தேவால யங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்ட பங்கள், பெரிய மால்களில் உள்ள வளாகங்கள் ஆகியவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுங்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற மருத்துவர்கள் செவி லியர்கள் மருத்துவ முன்கள பணியாளர்களை இந்த அசா தாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தற்காலிகமாக பணிய மர்த்தி அவர்களை கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகருக்கு கொரோனா தொற்று
திருவள்ளூர் மே 21- காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வீட்டி லேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியின் காங்கி ரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
காலமானார்
விழுப்புரம், மே 21- விழுப்புரம் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் கண்டமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் குப்புசாமியின் மகன் ஐய்யப்பன் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு புதுச்சேரி கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு கட்சியின் மாவட்டக் குழு சார்பில் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.