districts

மீண்டும் ‘சென்னை சங்கமம்’

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி சிறுவர்கள் பலி

விழுப்புரம், டிச.14-   விழுப்புரம் அருகே உள்ள வெள்ளகுளம் சேர்ந்தனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விக்னேஷ் (8). ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி மகன் தர்ஷன்(5). விக்னேஷ் தர்ஷனை சைக்கி ளில் ஏற்றிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சேர்ந்தனூரில் இருந்து தென்குச்சிப்பாளையம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, திடீரென அவர்கள் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியாகினர். இதற்கிடையே விளையாடிக்கொண்டி ருந்த சிறுவர்கள் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது தென்குச்சிப்பாளையம் சுரங்கப்பாதையில் இருவரும் தண்ணீரில் பிணமாக மிதந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உற வினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து குறித்து வளவனூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம் தெய்வானை காலமானார்

புதுச்சேரி, டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு முன்னாள் உறுப்பினரும், தற்போதைய வில்லியனூர் - நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டி உறுப்பினருமான  தி. தெய்வானை திங்களன்று (டிச.13) காலமானார். அவருக்கு வயது 65. வில்லியனூர் அடுத்துள்ள  வட மங்க லத்தில் வைக்கப்பட்டிருந்த தெய்வானையின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சத்தியா,வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மாதர் சங்க பிரதேச நிர்வாகிகள் இளவரசி, மாரிமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கடன் தகராறு: லாரி உரிமையாளர் அடித்து கொலை

ஆம்பூர், டிச.14- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வன்னிய அடி களார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், சின்ன வேப்பம்பட்டு சங்கர் இருவரும் நண்பர்கள். இவர்களில் சங்கர் லாரி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசன் லாரி உரிமையாளராக உள்ளார்.  நண்பர்கள் என்பதால் சங்கருக்கு வெங்கடேசன் கடனாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். இந்த தொகையை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது. அப்போது, தனது வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்த சங்கர், வெங்கடேசனை தாக்கியதால் படுகாயமடைந்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துபார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே வெங்கடேசன் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கர் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமியை தேடி வருகின்றனர்.

சாதி சான்று இல்லாமல் உயர் கல்வி பாதிப்பு: பழங்குடியின மாணவிகள்

திருவண்ணாமலை,டிச.14- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் திங்களன்று(டிச.14) நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் பழங்குடியின மாணவிகள் மனு அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- மலைவாழ் சமூகத்தை சேர்ந்த நாங்கள், மலையாளி பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தில் உள்ளோம். எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததால், கல்வியை தொடர முடியவில்லை. மேலும், கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியவில்லை. உயர் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்டி மலையாளி என சாதி சான்றிதழ் வழங்கினால், உயர்கல்வி படிக்க வழி பிறக்கும். புளியம்பட்டு, அருவங்காடு, கல்நாத்தூர், புதூர்செக்கடி ஆகிய கிராமங்களில் சாதி சான்றிதழுக்காக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு மலையாளி எஸ்டி என சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

;