சென்னை, ஜன. 29 - சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 10,559 தெருக்களில் கொரோனா நோயாளிகள் உள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 6,962 தெருக்களில் 3க்கும் குறைவான நோயாளிகளும், 1,745 தெருக்களில் 5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகளும் உள்ளனர் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன.29 அன்று சென்னையில் கொரோனா தொற்றால் 4508 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38799 என்ற அளவில் உள்ளது.