districts

img

புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் மாநாடு

சென்னை, செப். 25- இந்திய கதிர்வீச்சு புற்று நோயியல் நிபுணர்கள் சங்கத்துடன் (ஏ.ஆர்.ஓ.ஐ) டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை இணைந்து, 37ஆவது ஆண்டு ஏராய்கான் 2022 என்ற மாநாட்டை சென்னை யில் நடத்தியது. செப்.24,25 ஆகிய தேதிகளில் நடை  பெற்ற  இந்த மாநாட்டில் ‘கதிரியக்கப் புற்று நோயியலின் வியூக அறி வியல்’ என்கிற தலைப்பில் பல்வேறு நிபுணர்கள் உரை யாற்றினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏ.ஆர்.ஓ.ஐ. அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் ஆனந்த் ரெட்டி நினைவு மலரை வெளியிட்டு தொடக்க உரை ஆற்றினார்.  டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை யின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். டி.ஜி. கோவிந்தராஜன்,  தலைமை கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். ஜெ. சுரேந்திரன், ஏ.ஆர்.ஓ.ஐ. தமிழ்நாடு - புதுச்சேரிப் பிரிவுத் தலைவர் டாக்டர். எஸ். அலெக்ஸ் ஏ பிரசாத், செயலாளர் டாக்டர் சரிதா தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  இந்த மாநாட்டில் மாநாடு, கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோய் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் டி.ஜி. சிவரஞ்சனி கூறினார். கதிரியக்க சிகிச்சை மூலம் மார்பகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்களுக்கு துல்லியமாக சிகிச்சை அளிக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.  இரண்டு நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.