districts

img

கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் 50 மையங்களில் ரத்ததானம்

சென்னை, ஜன. 27 - குடியரசு தினமான வியாழனன்று (ஜன.26)  மாநிலம் முழுவதும் 50 மையங்களில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் ரத்ததான முகாம் நஞத்தினர். தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் - பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை வடசென்னையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி .கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார். தென்சென்னையில் நடைபெற்ற முகாமில் துணைமேயர் மு.மகேஷ்குமார், அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பி.சகிலன், சங்கத்தின்  மாநிலச் செயலாளர் எஸ். வெள்ளைச்சாமி, துணைத் தலைவர் பி.ஆர். தணிகைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் வீரமுத்து திருப்பூரிலும், பொருளாளர் கோவர்த்தனன் காஞ்சிபுரத்திலும் பங்கேற்றனர்.