தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி திருவண்ணாமலையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியர்ர் பா.முருகேஷ் கலந்து கொண்டு ரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாரி, மாவட்டத் தலைவர் அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் பிரபு, அரசு ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் பாஸ்கரன், மாவட்டத் தலைவர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.