districts

img

புதிய சட்டங்களை கொண்டு வந்த பாஜக அரசு வழக்கறிஞர்கள் ஆவேசம்

புதுச்சேரி, ஆக.21-

     ஒன்றிய அரசின் சட்ட ஆணையம்  பரிந்துரை இல்லாமல் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ள ஒன்றிய பாஜக அரசை கண்  டித்து புதுச்சேரியில் வழக்க றிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

     ஒன்றிய சட்ட ஆணை யத்தின் பரிந்துரை இல்லா மல் குற்றவியல் நடை முறை சட்டத்தை மாற்றும் வகையில் தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கத்தில் கொண்டு வந்துள்ள  மூன்று சட்டங்களை உடனடியாக ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும்.

     ஆங்கில மொழியில் உள்ள  சட்டங்களின் பெயர்களை, இந்தி மொழி யில் பெயர் சூட்டும் நட வடிக்கையை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது.

    புதுச்சேரி ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு புதுச்சேரி  வழக்க றிஞர்கள் கூட்டமைப்பு தலைவர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் ஆர்ட்டி சங்கர் தலைமை தாங்கி னார்.  கூட்டமைப்பு நிர்வாகி கள் பாலசுந்தரம், ஏகே. ஆனந்த், ராஜ்குமார், செல்வம், சந்தோஷ், செந்தில்குமார், அசோக் குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சுப்பிர மணி, பரிமளம், திருக் கண்ண செல்வம் லெனின், தாமோதரன், சசி பாலன், ராஜா, பிரகாஷ், சரவணன் உட்பட திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்ற னர்.

விழுப்புரம்

      தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஆக.21 முதல் 31 ஆம் தேதி வரை நீதி மன்ற முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குவிந்தனர்.

     இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் காளிதாஸ் தலை மையில் பார் அசோசியன் தலைவர் தயானந்தம், விழுப்புரம் லாயர் அசோசி யேஷன் செயலாளர் சண்முகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மூத்த வழக்கறிஞர்கள் மாரிமுத்து, ஜெயபிரகாஷ், தன்ராஜ், தமிழரசன், முகில் வண்ணன், பிரின்ஸ், சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம் புறக்கணிப்பு

    விக்கிரவாண்டி  நீதி மன்றத்தை திங்களன்று (ஆக.21)  புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.  தலைவர் ஏ.சங்கரன் தலைமை வகித்தார். செயல் தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் ஞானசேகரன், முருகன், காளிதாஸ், பிரகாஷ்,  மோகன்,அலாவுதீன், கார்த்திக், சரவணன் மற்றும் பல வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பேசினர்.