districts

img

பழங்கால நாணயங்கள் கண்டெடுப்பு

ராணிப்பேட்டை, ஜூன் 14-

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் சீனிவாச ஐயர் (48). இவர் வீட்டு பராமரிப்பு பணிக்காக சுவரை இடித்த போது 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த 17 அரியவகை நாணயங்கள் கிடைத்தது. இதுகுறித்து நெமிலி வட்டாட்சியர் பாலசந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்து அரியவகை நாணயங்களை பார்வையிட்டார். பின்னர் அதனை மீட்டு நெமிலி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    வருவாய் ஆய்வாளர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரகு, இளவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.