districts

img

பிளே ஆப் சுற்றுக்கு கூடுதலாக 2 மணிநேரம் மழைக்காக புதிய விதிகளை கொண்டு வந்த பிசிசிஐ

காலநிலை மாற்றத்தால் எப்பொழுது மழை பெய்கிறது, எப்பொழுது வெயில் கொளுத்துகிறது என்பது கணிக்க முடியாத நிலையில் உலகம் திணறி வருகிறது.  வெயிலை கூட சில நேரங்களில் கணித்து விடுகிறார்கள். ஆனால் மழை யை கணிக்க முடியவில்லை. இதனால் வெளியரங்கு விளையாட்டு கடுமை யாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக உல கின் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றான கிரிக்கெட்டின் நிலைமை மழையால் படுமோசமாக மாறி யுள்ளது. மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டத்தை ரசிக்க வருவது போல மழை புகுந்து ஆட்டத் தின் சுவாரஸ்யத்தை சிதைத்து விடு கிறது. மழை என்ற வார்த்தையை கூறி னாலே கிரிக்கெட் ரசிகர்கள் அலர்ஜிக்கு உள்ளாகும் அளவிற்கு மழை மிரட்டி வருகிறது.  இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடர் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்துள்ளது. அதில்,”லீக் சுற்று போட்டிகளின் போது மழை பெய்யும் பட்சத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே கூடுதலாக முடிக்க வேண்டும்.  ஆனால் நடப்பு சீசன் பிளே ஆப் சுற்றுக்கு 2 மணி நேரம் வரை கூடுதல்  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மணி நேரத்திற்குள் ஓவர்கள் குறைக்கப் பட்டு போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். இறுதிப் போட்டிக்கும் இதே  விதி பொருந்தும். மழையால் தடைபடும் பிளே ஆப் போட்டிகளின் போது 2 மணி நேரம் கூடுதல் கால  அவகாசத்திலும் போட்டியை முடிக்க முடியவில்லை என்றால், ரிசர்வ் நாளான மறுநாள் போட்டியை நடத்த லாம். அதே போல ஒவ்வொரு பிளே  ஆப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் எடுத்துக் கொள்ளலாம். போட்டி நாள் மற்றும் ரிசர்வ் நாள் என 2 நாட்களிலும் மழை யால் போட்டியை நடத்தி முடிக்க முடி யவில்லை என்றால், புள்ளிப் பட்டி யலில் எந்த அணி முன்னிலை பெற்று இருந்ததோ அதன் அடிப்படையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறி விக்கப்படும். அதுபோல பிளே ஆப் போட்டி டை-யானால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவரும் டை  ஆனால் அல்லது கூடுதல் நேரத்தின் காரணமாக நடத்தி முடிக்க முடிய வில்லை என்றால் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருந்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த விதிகள் அனைத்தும் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும்” என கூறப்பட்டுள்ளது. முன்பு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் இருந்த நிலை யில், நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முதல்  பிளே ஆப் போட்டிகளுக்கும் ரிசர்வ் நாள் விதியை பிசிசிஐ அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

;