ஆன்லைன் அபராதத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது, வாகன ஓட்டிகளை கொலை குற்றவாளிகளாக சித்தரிக்கும் பிஎன்எஸ் சட்டத்தை அமல்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன் தலைமையில் செயலாளர் பி.ரமேஷ், சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.