செங்கல்பட்டு, டிச.6- செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பு தெரிவித்த மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்களன்று (டிச 6) டாக்டர் அம்பேத்கர் 65வது நினைவு நாள் அனு சரிப்பு கூட்டத்தை வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு செங்கல் பட்டு மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தர வதனாவை கலந்து கொள்ளுமாறு வழக்கறி ஞர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வராமல் மாவட்ட நீதிபதி வழக்கறிஞர்களை அலைகழித் ததாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள் மட்டும் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நீதிபதி நிகழ்ச்சிக்கு வராததால் வேறு எந்த நீதிபதிகளும் நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வில்லை. அம்பேத்கர் நினைவு நாளில் அவமரியாதையாக நடந்து கொண்டதாக மாவட்ட நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் ஒருநாள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.