districts

img

சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகள் திறப்பு

சென்னை, பிப்.1- நாட்டிலேயே முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருவோர் மற்றும் பொது மக்கள் பொழுது போக்கிற்காக பிரபல திரையரங்க நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் இந்த திரையரங்குகளை அமைத்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள பிவி ஆர் ஏரோஹப்பில்  5 திரை யரங்குகள் (மல்டி பிளக்ஸ்)  அமைக்கப்பட்டுள்ளது.  இந்த திரையரங்குகளை யும் சேர்த்து சென்னையில் பிவிஆர் சினிமாஸ் 77 திரை களுடன் 12 மல்டி பிளக்ஸ் களை கொண்டுள்ளது. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரை யரங்கம்  1155 பார்வை யாளர்கள் அமரும் திறன் கொண்டது.  மற்றும் 2கே ஆர்பிஜி + லேசர் புரொஜெக்டர்கள் நிறுவப் பட்டுள்ளன.  இத னால் திரைப்படங்களை தெளிவாகவும் துல்லி யாகவும்  காணமுடியும் என்று பிவிஆர் சினிமாஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் பிஜிலி கூறியுள்ளார். மாறிவரும் பொழுதுபோக்கு ரச னைக்கு  ஏற்ப  நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நுகர்வோருக்கு சிறந்த திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை வழங்க  உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.