பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒருபிரிவான கவச வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் சென்னை குரோம்பேட்டை யில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எக்ஸ்புரோ 24 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் ஆவடியில் தயாரிக்கப்படும் கவச வாகன மாதிரியை அதிகாரிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.