- மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான 98வது வட்டத்திற்குட்பட்ட சாமிதாசபுரம், லாக்மா நகர், குட்டியப்பன் தெரு, அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், கே.எச்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி நிவாரணப் பணியில் ஈடுபட்டார்.
- வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் தேங்கி நிற்கிறது. வேளச்சேரி பகுதி, தரமணி பிள்ளையார் கோவில் தெரு, புத்தர் தெரு, கட்டபொம்மன் தெரு, பட்டுக்கோட்டை அழகிரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் உள்ளது.
- சென்னையில் பெய்த மழையால் சூளை தட்டான்குளம் பகுதியில் தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது.
- கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.