districts

img

பண்டைய வாழ்க்கை முறையை மக்கள் அறிய தொல்லியல் ஆய்வுகள் தொடர வேண்டும்

சென்னை,செப்.26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘எழுக  சிந்து’கருத்தரங்கம் அண்மையில் (செப் 23) சென்னை இக்சா மையத்தில் நடந்தது. சிந்து சமவெளி நாகரீகத்தின் பெரு மையைக் குறித்த எழுக சிந்து  என்ற தலைப்பில் நடைபெற்ற கருத் தரங்கத்தில் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸூம் கீழடியின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணாவும் கருத்துரையாற்றினர்.
அமர்நாத் ராமகிருஷ்ணா
சிந்து நாகரிகத்தையும் கீழடி நாகரிகத்தையும் ஒப்பிட்டு பேசிய  தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்,  சிந்து நாகரிகம்தான் கீழடி நாகரி கத்துக்கும் முந்தைய நாகரிகம் என்றார். சிந்துசமவெளி கொண்டிருக்கும்  பண்பாட்டின் தொடர்ச்சியை கீழடியில் காண முடிகிறது. சிந்து நாகரிகமும் ஆதிச்சநல்லூர் நாகரிகமும் ரயில்பாதை போடும்போது கண்டு பிடிக்கப்பட்டவை என்றவர், கீழடி மட்டும்தான் திட்டமிட்டு ஒரு நாகரீ கத்தின் தடத்தை கண்டறிய வேண்டும்  என்கிற முனைப்போடு முன்னெடுக் கப்பட்ட அகழாய்வுப் பணி என்றார். இலக்கியம் பேசும் காவிரிப் பூம்பட்டினத்தையும் தற்போதைய பூம்புகார் நகருக்கும் தொடர்பு உள்ளது. இரண்டுக்கும் இடையே பல  ஒற்றுமைகள் இருந்தாலும் உறு திப்படுத்துவதற்கான தரவுகளை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட வில்லை என்று கூறிய அவர், கடலுக்கு  அடியிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றார். இந்தியத் துணைக் கண்ட பண்பாட்டு அகழாய்வில் மதுரை நகரம் முக்கியப் பங்காற்று கிறது.
மதுரையை ஆய்வுசெய்வதில் சிரமமம்
கடந்த 3000 வருடங்களாக மதுரை, தொடர்ந்து இயங்கி வரும் நகரமாக இருப்பதால், அதை அகழாய்வு செய்யும் வாய்ப்பு கிடைப்பது சிரம மாக இருக்கிறது என்றும் கவலை தெரிவித்தார். இந்தப் பின்னணியில் கீழடியில் நமக்குக் கிடைத்துள்ள தொல்பொருள்கள் மேலும் புதிய ஆதாரங்களை நம் முன்வைக்கின்றன என்றார். இன்னும் பல முக்கிய பகுதி களில் அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள் ளப்பட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவை நமது வரலாறுகளை, மனித நாகரிகத்தை, பண்டைய வாழ்க்கை முறையை சாதாரண மக்கள் அறியச் செய்யும் என்றும் தொல்லியல் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். தொன்மங்கள் அறியத்தக்க இடங்கள் மீது ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அவசியம் என்றும்  விரிவான ஆய்வு கள் நமக்குக் கூடுதல் வெளிச்சம் வழங் கும் என்றும் அமர்நாத் கூறினார்.
நிவேதிதா லூயிஸ்
பொதுவாக புராதன பொருள் சேகரிப்பில் ஏற்படும் நாட்டம் வேறு,  பண்டைய வரலாறுகள் குறித்த ஆர்வத் தோடு அணுகுவது வேறு, தனிநபர் ஆர்வத்தை மீறி, வெகு மக்கள் அறியும் வண்ணம் காட்சிப்படுத்தலும் வரலாற்றை அறிய முற்படுவதும் முக்கியம். மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடல் முயற்சிகள், ஆய் வாளர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், பதவி மாற்றத்தால் அல்லது ஆய்வாளர் மரணத்தால் விடுபட்டுப்போன தரவுகள், இங்கிலாந்து காலனிய ஆட்சியாளர்களின் தன்மை புரிந்து சில ஆய்வாளர்கள் நேர்த்தியாக அனு மதியும், நிதித் தேவையும் பெற்ற வண்ணம் தொடர்ந்த ஆய்வுகள் என்று வலியும் பெருமையும் நிறைந்த  சுவாரசியமான செய்திகளை விளக்கினார் நிவேதிதா.   வெள்ளையர்கள் மட்டுமே ஆய்வில் இறங்கினர் என்று எண்ண வேண்டியது இல்லை, திறமை வாய்ந்த  ஆய்வாளரான ரக்கல் தாஸ் பானர்ஜி  மேற்கொண்ட ஆய்வுகளை, அப்போதைய தொல்லியல் துறை இயக்குநரான மார்ஷல் தமது பங்களிப்பாக, அறிவுச் சொத்துத் திருட்டைச் செய்தார் என்று ஆய்வாளர்  மிஸ்ரா என்பவர் சில ஆண்டுக ளுக்குமுன் வெளியான ‘மறக்கப்பட்ட தொல்லியல் ஆய்வாளர்’ எனும் புத்தகத்தில் மெய்ப்பித்திருந்தார். மொகஞ்சதாரோ என்ற பெயரின் பொருளே நீத்தார் மேடு என்று  குறிப்பிட்ட அவர், பெரிய தாழிகள்  உள்ளீடாக இருந்த பானையோடுக ளோடு புதைபட்டு கிடைத்ததோடு சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். ஹரப்பா பகுதியில் கிடைத்த சுடுமண் சிற்பங்கள், பானை ஓடுகள் திருநெல்வேலி மாவட்ட அகழ்வு ஆய்வில் கிடைத்தவையோடு ஒப்பிடத்  தக்கவையாக இருப்பது, இதில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல், நீள அகல உயர அளவுகள் கூட ஒரே விகிதங்களில் அமைந்திருப்பது தொன்ம நாகரிகங்கள் எந்த இனக் குழுவினருடையது என்பதற்கான சான்றுகளாக அமைவதையும் சுட்டிக் காட்டிய நிவேதிதா லூயிஸ் இவை ஆரியர்கள் வருகைக்கு முந்தை யவை, திராவிட நாகரிகத்தின் உறுதி யான சாட்சியங்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்தரங்கில் மத்திய சென்னை மாவட்ட தமுஎகச மாவட்டச் செயலாளர் ராஜசங்கீதன், நிர்வாகிகள் தமிழ்செல்வன், டெல்ஃபைன், அ.முகமது ஃபெரோஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;