ஓசூர் வட்டம் ஒன்னல்வாடியில் உள்ள அகஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், முதல் 3 இடங்களை பிடித்த 6 மாணவர்களுக்கும் ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும், சான்றிதழும் வழங்கினார். 67 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பவர் பேங்க்கும் வழங்கினார்.