ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகிறது. இதனையொட்டி திங்களன்று (நவ.18) தரமணியில் 178வது வட்டக் கிளைகள் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் பேசினார். தொகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி, கிளைச் செயலாளர் சத்யாதேவி, நதிராபானு உள்ளிட்டோர் பேசினர்.