கிருஷ்ணகிரி,பிப்.22 - ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளி யில் ஆண்டு விழா மாவட்ட கல்வி அதிகாரி இராமதேவி தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் நர்மதாதேவி வர வேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் மைக்ரோடெக் நிர்வாக இயக்குநர் முரளி பாபு, நியூமன் நிறுவனங்களின் இயக்குநர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினர்.மாநக ராட்சி கல்விக்குழு தலைவர்,எச்.ஸ்ரீதரன், திட்டக்குழு தலைவர் அசோகா ரெட்டி தலை மையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலை வர் இராஜசேகர்,துணை தலைவர் கருணா நிதி,பொருளாளர் எம்.வெங்கடேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, கல்வியாண்டில் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் 100 விழுக்காடு வருகை தந்த மாணவர்க ளுக்கு,முதல் மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகளுக்கு, தமிழில் படித்து பத்தாம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற நேபாளி மாணவிக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. தூய்மை பணியா ளர்கள்,சிறப்பு நூலகம், அறிவியல்,கணினி பயிற்சி கூடம், அமைத்துக் கொடுத்த முரளி பாபு ரவீந்திரன்,பொறியாளர் செல்வகுமார் கவுரவிக்கப்பட்டனர். ஆசிரியர் பாக்கிய லட்சுமி நன்றி கூறினார்.