மாடம்பாக்கம் ஏரியை பாதுகாத்து பராமரிக்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூலை 1) மாடம்பாக்கம் பகுதியில் ‘சூழலியல் நடை’ நடைபெற்றது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்புக்காக இயங்கி வரும் கிருஷ்ணன், தாம்பரம் மாநகராட்சி 69வது வார்டு கவுன்சிலர் கே.ராஜ், சங்கத்தின் தலைவர் எஸ்.மோகன், செயலாளர் இரா.சீனிவாசன் உள்ளிட்டோர் ஏரியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து உரையாற்றினர்.