districts

img

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மார்க்கங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் - எஸ்.கோபால் செயலாளர் (சிபிஐஎம்) திருவள்ளூர் மாவட்டம்

 அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் அந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.  அதானி துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டால்  மீனவ குப்பங்கள் மட்டுமல்ல அருகில் உள்ள  ஏராளமான கிராமங்களும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து,  எண்ணூர்முதல் ஆரம்பாக்கம் வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களை சந்தித்து அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு  எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  இதனால் உண்மையை நிலையை  உணர்ந்த  மக்கள் அதானி விரிவாக்க திட்டத்திற்கு  பலத்த எதிர்ப்பு தெரிவி த்தனர். இதனால் அதானி நிறுவனம் கருத்து கேட்புக் கூட்டத்தை ரத்து செய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கட்சியின் சார்பில்  மக்களை திரட்டி நில மீட்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில் மழைக்காலத்தில் வரும் உபரிநீரை தேக்கிவைக்க ஆங்காங்கே தடுப்ப ணைகள் கட்ட வேண்டும். பல ஏரிகளில் இன்னும் குடி மராமத்து பணிகள் நடைபெறவில்லை. நடைபெற்ற பணிகள் கூட பெயரளவில் நடந்துள்ளதோடு அதில்  ஏராள மான முறைகேடுகளும்  நடந்துள்ளன.  சோழவரம் அருகில் உள்ள ஞாயிறு ஏரியில் விதிமுறைகளை. மீறி  மணல் எடுக்கப்பட்டது. சிபிஎம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் நடத்திய  தொடர் போராட்டத்திற்கு பிறகு அது தடுத்து நிறுத்தப்பட்டது. இப்படி மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்காததால்  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

பழங்குடி இன மக்களுக்கு ஏராளமான போராட்டங்கள் நடத்தி குடிமனை பட்டா, இனச் சான்றிதழ் என  1000 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளோம். திருவள்ளூர் மாவட்டம் பிரிந்து கால் நூற்றாண்டு காலம் ஆன பிறகும் இம்மாவட்டத்தில் என தனியாக மின் பகிர்மான வட்ட மூத்த மேற்பார்வை பொறியாளர் (எஸ்.இ) இதுவரை நியமிக்கப்படவில்லை. தலைநகர் திருவள்ளூரில்  அரசு கலைக் கல்லூரி கூட இல்லாத நிலை உள்ளது. கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் நான்கு வழி இரும்பு பாதையை அமைத்து, கும்மிடிப்பூண்டி மற்றும் திருவள்ளூர் ஆகிய மார்க்கங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.  திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும். திருத்தணியில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயிரக் ்கணக்கானோர், ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும்.புதிதாக அமைந்துள்ள அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் குவிந்துள்ளன. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 23 வது மாநாடு ஆர்.கே.பேட்டையில் டிசம்பர்-18, 19- ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மக்கள் பிரச்சனைகள் குறித்து  விவாதித்து அதற்கான இயக்கங்களை முன்னெடுக்க திட்டமிடுவோம்.

;