கிருஷ்ணகிரி, ஏப்.27- தீக்கதிர் செய்தி எதிரொலியாக மத கொண்டப்பள்ளி தலித் மக்கள் பகுதி கழிப்பறை வளாகத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மதகொண்டபள்ளி தலித் மக்கள் பகுதியில் 2011 ல் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் நீண்ட நாட்களாக சீர்படுத்தப்படாமல் உள்ளது குறித்தும், இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் 26 ஆம் தேதி தீக்கதிரில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் தளி வட்டார வளர்ச்சி அலுவலர், மதகொண்டபள்ளி ஊராட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் உடனடியாக நேரில் வந்து இப்பகுதியையும் பராமரிக்கப்படாத கழிப்பதை வளாகத்தை யும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படை யில் இந்த கழிப்பறை வளாகத்தை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு 307520 நிதி 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பெறப்பட்டு உடனடியாக சீர்படுத்திடும் பணி துவங்க உள்ளது என வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் அறிவித் துள்ளார்.