அம்பத்தூர்,செப்.22- அம்பத்தூர் தொழிற் பேட்டை யில் அமைந்துள்ள மழைநீர் கால்வாயில் கழிவு பொருட்கள் தேக்கம் அடைந்து மழைக் காலங்களில் ஏரியில் கலக்கும் அபாயம் உள்ளது. அம்பத்தூர் தொழிற் பேட்டை ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற் பேட்டை. அம்பத்தூர் டெலி போன் எக்சேஞ்சிலிருந்து பட்டரவாக்கம் செல்லும் வழியில் மழைநீர் வடிகால் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த மழைநீர் வடிகால் கால்வாயில் பல நாட்களாக பிளாஸ்டிக், திடக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேரும் கழிவுநீர் எண்ணெயுடன் கலந்து சுகாதாரமற்ற சூழல் உருவாகி வரு கிறது. கால்வாயில் ஓடும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவுகளும் அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் உள்ள நீருடன் கலந்து வருகிறது. இப்படி கலந்து வருவதால் ஏரி யில் உள்ள நீரும் மாசுபடு கிறது. மேலும் அங்கு சாலை யோரம் புகைப்பிடிப்பவர் கள் சிகரெட் துண்டுகளை மழைநீர் கால்வாயில் வீசி எரியும் போது தீப்பற்றி எரி யும் அபாயம் உள்ளது. இந்நிலையில், கால் வாயில் தேங்கியுள்ள கழிவு பொருட்கள் மற்றும் கழிவுநீரை மழைக் காலத்திற்குள் அகற்ற வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.