districts

img

மணலி புதுநகர் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 6- மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப் ்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-  கடந்த மாதம் 20ஆம் தேதி கனமழையால் கொசஸ் தலையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மணலி புதுநகர், வடிவுடை யம்மன் நகரில் வெள்ளத் தால் சூழப்பட்ட குடியிருப் புப் பகுதிகளை முதலமைச் சர் நேரில் சென்று பார்வை யிட்டு, ஆய்வு செய்து, தேங்கி யுள்ள வெள்ளநீரை அகற்றிட  அலுவலர்களுக்கு உத்தர விட்டிருந்தார். அதன்படி, சென்னை, மணலி புதுநகர், வடிவுடை யம்மன் நகரில் மேற்கொள் ளப்பட்ட சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை திங்களன்று டிச.6  முதல மைச்சர்  நேரில் சென்று பார் யிட்டு, ஆய்வு செய்தார்.  

அப்போது அப்பகுதி மக்கள், சீரமைப்புப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல்  கிடைத்து வருவதாகவும், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வது தங்களுக்கு மனநிறைவை தருவதாகவும் தெரிவித் தனர்.   இப்பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.   பின்னர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் ஊராட்சி, கொசஸ்தலை ஆற்றுப்  பகுதியை முதல மைச்சர்  பார்வையிட்டு ஆய்வு செய்து, கொசஸ் தலை ஆற்றிலிருந்து உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் நடவடிக்கை எடுத்திட நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம்,  துரை சந்திரசேகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்  பேடி, மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் உடனிருந்த னர்.