districts

img

தீட்சிதர்கள் குடும்பத்திற்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டமா?

சிதம்பரம்,டிச.11- சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தேர் திருவிழா, 20ஆம் தேதி தரிசன விழா நடைபெறுகிறது.   இந்த விழாவில் வெளிநாடு உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டுக்கு இருமுறை ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழா என நடைபெறும் இந்த திருவிழா காலங்களில் கோவிலில் திருவிழா  விமர்சையாக இருக்கும். இதனை பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கொரோனா கட்டுபாடு உள்ளதால் மாவட்ட நிர்வாகம்  கோவிலுக்கு உள்ளே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் சார்பில் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து டிச 11ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்களை கோவிலுக்கு உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.  ஆனால் இதற்கு மாறாக நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்குள் சென்ற வண்ணம் இருந்தனர். இதனைப் பார்த்த வெளியில் நின்றிருந்த பக்தர்கள் தீட்சிதர் குடும்பத்திற்கு ஒரு சட்டம்? பக்தர்களுக்கு ஒரு சட்டமா?  என வாக்குவாதத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் காவல்துறையினர் தீட்சிதர் குடும்பத்தை கோவிலுக்கு உள்ளே செல்வதை தடுக்க முடியாத நிலையில் வெளியில் நின்றிருந்த பக்தர்களையும் வேறு வழியின்றி உள்ளே அனுப்பினர்.    இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கோவிலுக்கு உள்ளே பொதுமக்களை அனுமதித்தது யார் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

;