சென்னை, செப். 29 - 98வது வார்டில் ஒரு மாதமாக உதவி பொறியாளர் (ஏஇ) இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி குற்றம் சாட்டினார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழனன்று (செப்.29) ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. நேரமில்லா நேரத்தில் ஆ.பிரிய தர்ஷினி பேசியதன் சுருக்கம் வருமாறு: கடந்த மாதம் முறையிட்ட தையடுத்து திருவள்ளுவர் பூங்கா, வி.பி. காலனி கால்வாய் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதற்கு நன்றி. மாநகராட்சி முழுவதும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. வார்டு 4ல் தொகுப்பு 39ல் 26 இடங்களிலும், தொகுப்பு 38ல் 5 இடங்களிலும் கால்வாய்களுக்கு இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.வார்டு 41ல் 10 பணிகள் ஒரே ஒப்பந்ததார ரிடம் தொகுப்பாக கொடுக்கப் பட்டுள்ளதால் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வார்டு 4க்கு உட்பட்ட எர்ணா வூர் நெடுஞ்சாலை குண்டும் குழி யுமாக உள்ளது. அதை நெடுஞ் சாலைத் துறை மூலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு 123ல் உள்ள நாகேஸ் வரராவ் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடம் சீரமைக்கப் படும் என்று கடந்த கூட்டத்தில் மேயர் கூறினார். அதன்படி பணிகள் நடைபெறவில்லை. பருவமழை தொடங்க உள்ளது. ஆனால், 98வது வார் டில் ஒரு மாதமாக உதவிப்பொறி யாளர் இல்லை. இந்த வார்டில் 9 குடிசைப்பகுதிகள் உள்ளன. மழைக்காலங்களில் பணிகளை எவ்வாறு மேற்கொள் வது. வார்டில் உள்ள 115 தெருக்க ளுக்கு 80 தூய்மை பணியாளர் கள்தான் உள்ளனர். அதில் 40 பேர் வருவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. எனவே, வார்டிற்கு கூடுதலாக 30 தூய்மை பணியாளர்களை வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு 12 சோப்புகள் வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் 8 சோப்பு களை மட்டுமே வழங்குகின்ற னர். பெண் தொழிலாளர்களுக்கு 60 ரூபாய், ஆண் தொழிலாளர்க ளுக்கு 300 ரூபாயும் தையல் கூலியாக வழங்குகின்றனர். அதை காசோலையாக கொடுப் பதால் அவர்களால் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, இந்த தொகைகளை உயர்த்தி, ரொக்க மாக தர வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து மாதம் 300 ரூபாய் மருத்துவ கட்ட ணமாக பிடித்தம் செய்யப்பட்டு, மருத்துவ அட்டை வழங்கப்படு கிறது. அதை எந்த மருத்துவ மனைகளும் ஏற்றுக்கொள்வ தில்லை. எனவே, தொழிலாளர் களை இஎஸ்இ திட்டத்தில் இணைக்க கோருகின்றனர். இதனை மாநகராட்சி நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலளித்த மேயர், மழைநீர் கால்வாய் பணிகள் தொடர்பாக வாரந்தோறும் செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படு கிறது. இந்த பணிகளை கண்காணிக்க மண்டலத்திற்கு ஒருவர் வீதம் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள் ளனர். அக்.10ந் தேதிக்குள் மழை நீர் கால்வாய்களுக்கு இணைப்பு வழங்கப்படும். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார். நாகேஸ்வரராவ் பூங்கா உடற்பயிற்சி கூடம் பழுதுபார்ப் பதை மண்டல அதிகாரி மூலம் மேற்கொள்ளப்படும்.98வது வார்டுக்கு உதவி மின்பொறி யாளர், உதவி பொறியாளராக செயல்பட்டு வருகிறார். இந்த வார்டுக்கு தேவையான எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளர்களை அதிகரித்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.