காஞ்சிபுரம், ஜூலை 3-
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் சிறப்பு தாசில்தார் இந்துமதி தலைமையில் சோதனை நடைபெற்றது.
அப்போது வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக காஞ்சிபுரம் - வேலூர் சாலை கீழம்பி என்ற இடத்தில் 2 பேர் ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு ரேசன் அரிசி மூட்டை களை ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காவல்துறையினர் உடனடியாக லாரிகளை சோதனை செய்ததில் 7 டன் 950 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி மூட்டை களை கைப்பற்றினர். இது சம்பந்தமாக தப்பி ஓடிய நபர்களை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே நின்றுகொண்டு இருந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த முரளி (31), கரண் (24) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.