districts

சாலை விபத்துக்களில் 2 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர்,ஆக.2-

     தரமணி, பெரியார் நகரை சேர்ந்தவர் ரகு. அவரது மனைவி ஹேமலதா (25). கிண்டியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த அவர் புதன்கிழமை(ஆக.2) கணவர் ரகுவுடன் கல்லூ ரிக்கு சென்றார். அவர்கள்  அடையாறு பகுதியில்  சென்று கொண்டிருந்த போது பின்னால் சிமெண்ட்  கலவை ஏற்றி வந்த லாரி  திடீரென மோட்டார் சைக்கிள்  மீது மோதியது. இதில் ரகுவும், ஹேமலதாவும் இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கிய ஹேமலதா உடல்  நசுங்கி சம்பவ இடத்தி லேயே பலியானார். அவரது  கணவர் லேசான காயத்து டன் உயிர் தப்பினார்.

மற்றொரு சம்பவம்...

    பனையூரை சேர்ந்தவர் ரசீத் அகமது(23). இவர் அப்பகுதியில் செவ்வா யன்று இருசக்கரவா கனத்தில் சென்றபோது கியாஸ் ஏற்றி சென்ற லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதை பார்த்தபடி அவ்வழியே சென்ற ஒருவர்  கிரேனை ஓட்டிச் சென்ற தாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன் மோட்டார் சைக் கிளில் சென்ற ரஷீத் அகமது  மீது மோதியது. இதில் ரஷீத்  அகமது பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பலியானார்.