புதுச்சேரி மாநில அளவில் ரூ.2,628 கோடி கடன் வழங்கும்விழா லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், முதல்வர் ரங்க சாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், மற்றும் வங்கி குழுமங்களின் தலைவர் எஸ்.எல்.ஜெயின், இந்தியன் வங்கி உயர் அதிகாரி சிவசுப்பிரமணியன் ரமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்த இந்த விழாவுக்கு காலை 9 மணிக்கு புதுச்சேரி, பாகூர், மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், சேதராப்பட்டு, அரியாங்குப்பம் பகுதிகளில் இருந்து வயதான பெண்கள் மற்றும் கைக் குழந்தைகளுடன் தாய்மார்களை பேருந்தில் அழைத்து வந்து காக்க வைக்கப்பட்டார். இயற்கை உபாதைகளுக்கு செல்லக்கூட எந்த ஏற்பாடும் இல்லை.
புதுச்சேரி,ஜூலை 7-
புதுச்சேரிக்கு சிறப்பு நிதி ரூ.2,328 கோடி வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் முதல்வர் ரங்க சாமி வலியுறுத்தினார்.
இந்தியன் வங்கி சார்பில் நடைபெற்ற கடன் வழங்கும் சங்கம விழா புதுச்சேரி லாஸ்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்றது. இவ் விழாவில் பங்கேற்க புதுச்சேரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன், புதுச்சேரி தலைமை செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சி பணிகள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர், மாநில வளர்ச்சி குறித்து புதுச்சேரி ஒன்றிய அரசு வழங்க வேண்டிய சிறப்பு நிதி குறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் முதல்வர் ரங்க சாமி கடிதம் வழங்கினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசின் தொடர் ஆதரவினால் புதுச்சேரி யில் 12 ஆண்டுக்கு பிறகு முழுமை யான பட்ஜெட் அரசு தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே, தாங்கள் புதுவைக்கு வந்த போது ‘பெஸ்ட் புதுவையை’ உருவாக்க வேண்டும் என விரும்பியதை நினைவு கூர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அனைத்து அம்சங்களிலும் புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவது கடினமாக உள்ளது. புதுவையை சிறந்த யூனியன் பிரதேசமாக, உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2 ஆயிரத்து 328 கோடி சிறப்பு நிதி தேவைப்படுகிறது.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.425 கோடி, ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க ரூ.420 கோடி, சுகா தார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி, மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க ரூ.500 கோடி, தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைக்க ரூ.483 கோடி என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 328 கோடி தேவைப்படுகிறது.
புதுவையை ஒன்றிய நிதியின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. இதற்கு ஒன்றிய நிதி ஆணையத்தில் புதுவையை சேர்க்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்களிப்பாக 90 விழுக்காடு, மாநில அரசு 10 விழுக்காடு என நிதி முறையை திருத்தம் செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை நிறை வேற்ற வும், புதுச்சேரி மக்களின் நலன் கருதி முன்னு ரிமை அடிப்படையில் நிதி பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.