சென்னை,ஜூலை 8-
சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அதன் அதிகாரிகள் கூறியதாவது:- 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் வாங்கப்படுகிறது. இவை ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்கள் ஆகும். மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்க நல்லூர் ஆகிய 3 வழித்தடங்களுக்கு இந்த ரயில்கள் வாங்கப்படும். இந்த ரயில்கள், பயணிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான அளவில் சோதனை ஓட்டங்கள் நடைபெறும். முதல் 3 ஆண்டுகளில் இந்த ஊழியர்கள் மூலம் ரயில் ஓட்டத்தை கண்காணிக்க திட்ட மிட்டுள்ளோம். ரயில் பெட்டிகளுக்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்றனர்.